காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மூன்று நாள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.
இதில் இலங்கையில் சுற்றுலா பயணிகள் கவரும் பொலன்னறுவை பராக்கிரமபாகு சமுத்திரம், கண்டி பேராதெனிய பல்கலைக்கழம், நுவரெலியா விக்டோரியா பூங்கா, அம்பேவல பால் பண்ணை, பேராதெனிய கண்ணொறுவ விவசாயத் திணைக்களம், கண்ணொறுவ தேசிய விவசாய தொழில் நுட்ப பூங்கா, கொத்மலை நீர் தேக்கமும் அணைகட்டும், ரம்பொட நீர் வீழ்ச்சி, நுவரெலியா ஸ்டோபரி தோட்டம், லபுக்வல்ல மெக்வூட்ஸ் தேயிலை தொழிற்சாலை ஆகிய இடங்களுக்கும் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் அறபு மொழி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான; அப்பாஸி, கல்லூரியின் பகுதி நேர அறபு மொழி விரிவுரையாளர் மௌலவி ஆர்.எம்.ஸபீர் (பலாஹி )ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர்.
கடந்த சனிக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றுலா நேற்றுடன் முவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment