உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மே மாதம் 8 எட்டாம் திகதி கொண்டாடப்படும் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளில்  சிரமாதனம், முதலுதவி, மரதன் ஓட்டம் போன்ற பல்வேறு நிகழவுகள் இடம்பெற்றன.

இதனடிப்படையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் தொண்டர் இணைப்பாளர் சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட முதலுதவி உத்தியோகத்தர் திரு.கஜேந்திரன் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையைச் சேர்ந்த ஆண்,பெண் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்:

மே மாதம் 8 எட்டாம் திகதி கொண்டாடப்படும் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்படுவதையும்,சிரமாதனத்தில் கலந்து கொண்ட ஆண்,பெண் தொண்டர்களையும் மேற்படி படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment