அவர் வந்துட்டாராம்…!

justice– ஸகரிய்யா

ஊர் மக்களின்
வாயில் சிதறும்
இன்றைய வார்த்தைகள் இவை….

மக்களின் கண்களில்
மண்ணைத்தூவிவிட்டு
அல்வா கொடுத்திட
மீண்டும் வந்திட்டாரம்!

காக்கிச்சட்டையும்
ஊர்தலைமையும்
கண்மூடிவித்தையில்
உறங்கிக்கொள்ள
தராசு வீடு பிணை கொடுத்ததாம்!

தாரக மந்திரத்தில்
நாளிகை மூன்றில்
மக்களின் கண்களுக்கெட்டாமல்
குகைக்குள் சுருண்ட சிங்கம்
வெளிவந்துட்டாம்!

அரசியல் கலாட்டா இது
கைவைத்தால் சுட்டுப்பொசுக்கிடும்
உன்னையும் உன் மனையையும்.
வாய்மூடிடு!
மௌனமாய் போய்விடு!!

உன் பெண்ணையும்
தாயையும்
இப்பூமி இனி காக்குமா?
நீதான் துணிந்து
நீதி கூறமுடியுமா??

ஈமானும் இஸ்லாமும்
ஊரில் இல்லாது போயிட்டு.
நல்லோர்களும்
தீர்ப்புச்சொல்ல தயங்கிவிடுகிறார்கள்.
தப்புத்தான் என்றாலும்
நீ தப்பிப்போய்விடு
யார்தான் உனைப்பிடித்தடிக்க…?

அல்லாஹ்வே
நீயே சாட்சி!
மழைக்காய் வேண்டுகிறோம்
சுட்டெரிக்கிறது மணல்
பதறுகிறது காயப்பட்ட உள்ளம்
நீதிக்கே நிலைத்த
இஸ்லாமிய பூமிஇன்று
புஸ்வானமாகிப்போனதேன்?

Published by

Leave a comment