குடும்ப அரசாங்கத்தை ஒழித்துக்கட்ட திறைமறைவில் பாரிய முயற்சிகள்

politics[1]– கொழும்பிலிருந்து அபூ இஸ்ஸத்

கொழும்பு: நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் கொழும்பு அரசியலில் பாரிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

யுத்தத்தை வென்றாலும், சமாதானத்தை இந்நாட்டில் மக்களிடத்தில் தற்போதைய அரசாங்கம் நிலைநாட்ட தவறிவருவதாக வெள்நாட்டு மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் சுட்டிக்காட்டி வருகின்றன.

2009 மே மாதத்திலிருந்து இன்றுவரை அரசாங்கம் சிறுபான்மையினர் விடயத்தில் எவ்வித கவனத்தையும் திருப்பாமல், தனது குடும்ப அரசாங்கத்தையும், தனது பிறந்த இடத்தையும் அபிவிருத்தி செய்து மக்களிடத்தில் ஓர் சினிமாவை காண்பித்து வருவதாக  பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன.

அண்மைக்காலமாக முஸ்லிம்களை நோக்கி திசை திருப்பப்படும் இனவாத போக்குகள் உலகளவில் கவனம் செலுத்தி வருகின்றன.

பொதுபல சேனாவின் ஆக்கிரமிப்புக்களை தடுத்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய முடியாத நிலையில், ‘பொதுபல சேனா உறுப்பினர்களைக் கைது செய்யும் அளவுக்கு, அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்?’ என அரசாங்கம் மாறாக கேள்வி எழுப்பும் நிலைமையில் இன்றைய சிறுபான்மை சமூகம் இலங்கையில் தள்ளப்பட்டிருக்கின்றது.

இத்தகைய அநீதிகளை எதிர்த்து முஸ்லிம்களுக்காக பகிரங்கமாகக் குரல்கொடுத்து வந்த ஒரே ஒரு முஸ்லிம் மகன் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

அரசாங்கத்திலிருக்கும் எத்தகைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல்கொடுக்க முடியாதிருந்த இத்தகைய முஸ்லிம் உரிமை மீறல்களை, உலகுக்கு வெளிக்கொணர்ந்தவர்தான் தற்பொழுது சிறைப்படுத்தப்பட்டிருக்கும் முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத் சாலி.

அவரது விடுதலைக்காக இலங்கை முதல் அமெரிக்காவரை இன்று குரல் எழுப்பப்பட்டு வருவது அவரது நீதிக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.

இத்தகைய அரசாங்கத்தின் நாடகத்தின் காரணமாக தலைநகரில் பாரிய அரசியல் மாற்றங்களும், அதற்கான முன்னெடுப்புக்களும் துரிதமாக மேற்கொள்ளப்படு வருகின்றன.

திட்டமான பேச்சுவார்த்தைகள், முன்னெடுப்புக்களில் முன்னாள், இன்னாள் அரசியல் பிரமுகர்கள் இரகசிய கூட்டங்களை நடாத்தி ஆராய்ந்து வருகின்றனர்.

விரைவில் இந்த அரசாங்கத்தை இலங்கையின் அரசியல் வாசல்படியிலிருந்து வெளியேற்ற மும்முரமான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய தடுமாற்று நிலைமையைத் தடுக்கவே அரசாங்கம் தனக்கு விசுவாசமான சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை சம்பந்தமில்லாத வெளிநாட்டு பயணங்களுக்கு அனுப்பி, இலாபம் அடைந்து வருவதும் கவனிக்கத்தக்கது!

இருந்தும் எதிர்க்கட்சியின் கூட்டுக்கள் உறுதியான நிலையை அடையுமிடத்து, அரசியல்-கட்சித்தாவல்கள் எதிர்பாராத விதமாக இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment