இலங்கை உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சார்ஜா உல்லாச அதிகார சபையின் பணிப்பாளர் அலி அல் நொமனுடன் இன்று பேச்சு வார்த்தை

a– பழுலுல்லாஹ் பர்ஹான்

சார்ஜா: அரேபியன் போக்குவர்த்து சுற்றுலாக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டுபாய் சென்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சார்ஜா உல்லாச அதிகார சபையின் பணிப்பாளர் முஹம்மட் அலி அல் நொமன்  மற்றும் பொதுப் பணிப்பாளர் காலித் ஜஸிம் அல் மித்பா ஆகியோரை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
                                    
இதன்போது இலங்கையின் சுற்றலாத்துறை தொடர்பாகவும் அதற்காக டுபாய் வழங்க வேண்டிய பங்களிப்புத் தொடர்பாகவும் இலங்கை தற்போது அடைந்து வரும் சர்வதேச சுற்றுலாத்துறையின் முன்னேற்றங்களையும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.  மேலும் இலங்கையினை சர்வதேச சுற்றுலாத் துறையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் இதற்காக டுபாயின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் அல் நொமனிடம்  வேண்டுகோளினை விடுத்தார். 
  a                      

மேலும் இலங்கை மற்றும் டுபாய்க்கிடையிலான உறவினை பலப்படுவதற்காக சகல நடவடிக்கைகளையும் இலங்கை டுபாய்க்கிடையிலான சுற்றுலாத்துறை உறவனைத் தொடர்ந்தும் நிலை நாட்டுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்தவின் பூரன ஒத்துழைப்பைப் பெற்றுத்தருவதாக பிரதியமைச்சர் சார்ஜா உல்லாச அதிகார சபையின் பணிப்பாளர் முஹம்மட் அலி அல் நொமெனிடம் உறுதியளித்தார்.
               
மேலும் இலங்கை டுபாய் தொடர்பான இராஜதந்திர விடயங்கள் எதிர்கால உல்லாச அபிவிருத்தி தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தியதாக பிரதியமைச்சரின் ஊடக செயலாளர் முகம்மட் சஜீ தெரிவித்தார். 

b

Published by

Leave a comment