வெலிகம அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தினால் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரம் அன்பளிப்பு

weligama (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

வெலிகம: வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் வெலிகம நகரசபையால் நடாத்தப்படும் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரங்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வெலிகம நகர சபை மண்டபத்தில் நகரசபை தலைவர் ஹூஸைன் ஹாஜியார் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத் தலைவர் அஷ்செய்க் எம். ஓ. பத்ஹூர்ஹ்மான் கணணி இயந்திரங்களைக் உரிய பாடசாலை நிர்வாகத்திற்கு கையளித்தார்.

இந்நிகழ்வில் அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கநிர்வாக சபை அங்கத்தவர்கள், பாலர் பாடசாலைஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உற்பட பலர் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment