மோசமான உடல்நிலை காரணமாக அஸாட் சாலி மீண்டும் வைத்தியசாலையில்! மக்கள் அச்சம்!!

asad-AK-77

கொழும்பு: கடந்தவாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாட் சாலி, மோசமான உடல்நலக்குறைவின் காரணமாக மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

தனதுக்கு எதிராக அநீதியான விசாரணைகள் 4ம் மாடியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுவதால், அதனை எதிர்த்து இரு தினங்களுக்கு முன்னர் உண்ணாவிரதத்தை சிறையில் மேற்கொண்டிருந்தார்.

சிறைச்சாலை உணவையும், தனது வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவையும் உண்ணாமல் மறுத்து, தொடர்ந்தும் உண்ணா விரதத்தை மேற்கொண்டிருந்ததால், இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதே வேளை நேற்று வைத்தியசாலையிலிருந்து மீண்டும் அஸாத் சாலியை கொண்டுசென்ற குற்றப்புலனாய்வுப் பிரினர், 6 மாதங்களுக்கு அவரை சிறைப்படுத்தி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேல் இடத்திலிருந்து கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இன்று மீ;ண்டும் அஸாட் சாலிக்கு உடல் பலவீனம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அனுமதித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அசாத் சாலியின் விடுதலைக்காக ஹர்த்தால் மேற்கொண்டும், நோன்புகளை நோற்று பிரார்த்திக்குமாறும் உத்தியோகபூர்வற்ற செய்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment