தென் இந்திய தமிழ் சினிமாவில் ஜெய் எனும் நடிகரை வைத்து இரு புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி முஸ்லிம் இயக்குனர் அனீஸ் என்பவரால் படமாக்கப்பட்டு வருகிறது நிக்கா!
திருமணம் என்பதன் சரியான அரபு வார்த்தை ‘நிகாஹ்’ என்பதாகும். எனினும் அரபை சரியாக உச்சரிக்கத் தெரியாத அறியாமையினால் தலையும், காலுமில்லாமல் அரைவாசியில் நிற்கிறது ‘நிகாஹ்’ எனும் நிக்கா.
விஸ்வரூபம் போன்று, தீவரிவாதங்ளை முஸ்லிம்களுடன் சம்பந்தப்படுத்தி இப்படம் தயாரிக்கப்படாமல், முஸ்லிம்களின் திருமணத்தை பின்நிழற்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் எந்தளவு முஸ்லிம்களின் உண்மையான நிகாஹ்-திருமணம் பிரதிபடுத்தப்பட்டு மக்கள் மத்தியில் காண்பிக்கப்படும் என்பது கேள்விக்குரியது!
இஸ்லாம் போதிக்கும் திருமணம் என்பது அனைத்துலகத்துக்கும் ஒன்றே ஒன்றுதான். இருப்பினும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் திருமணக் கலாச்சாரங்களும், சம்பிரதாயங்களும் வித்தியாசப்படுகின்றன.
இப்படத்தில் நாயகனும் நாயகியும் முஸ்லீம்களா? என்பது தெரியப்படவில்லை!
எனினும் தென்னிந்தியாவின் இஸ்லாமிய அமைப்புக்கள் இப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர், இப்படம் உண்மையான இஸ்லாமிய நிகாஹ்வை பிரதிபலிக்கின்றனவா என்பதை ஓர் முறை சரிபார்க்கவேண்டும்.
இஸ்லாமிய திருமணங்களை ஹிந்திப்படங்கள் பின்மறைவில் அநேகமாக காண்பித்து வருவது வழக்கம். எனினும் தமிழ் படத்தில் தற்பொழுது முதன்முறையாக நிகாஹ்-நிக்கா முஸ்லிம்களின் திருமணத்தை முழுவதுமாக பிரதிபலிக்க வருகிறது.
‘பம்பாய்’ படத்தில் குர்ஆனை மடித்துவிட்டு, முஸ்லிம் நாயகி, இந்துக் காதலருடன் ஓடிச்செல்லும் இக்காட்சி அப்போதைய முஸ்லிம்களை பாதித்திருக்கவில்லை! முஸ்லிம்களாளேயே இப்படம் வெற்றிப்படமாகியதும் அன்றைய வரலாறு!
எனவே முஸ்லிம்களின் திருமணத்தை வைத்து எடுக்கப்படவிருக்கும் நிக்கா படத்திற்கு முஸ்லிம்களின் அவதானம் மீண்டும் தேவை.

Leave a comment