டுபாய்: அரேபிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் இடம் பெறுகின்ற போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம் வருடம் தோறும். இடம்பெற்றுவருகின்றது. இம்முறை டுபாய் நாட்டில் இன்றுமுதல் தெடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தில் விசேட கண்காட்சி ஒன்றும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பல நாடுகள் பங்குபெறும் இக் கூட்ட நிகழ்வில் இலங்கை சார்பில் பொருளாதர அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் பணிப்பில் பொருளாதார அபிவிருத்திப்பிரதிப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் ஆரம்ப நாளாகிய இன்று இடம்பெறும் கண்காட்சி நிகழ்வில் இலங்கைக்கான காட்சிக் கூடத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புலாஹ் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் ராஜ்யப்பிரதிநிதி மகிந்த பாலசூர்ய ஜனாதிபதியின் புதல்வர் ரோஸித்த ராஜபக்ஸ சிறிலங்கா எயார்லைன்ஸ் பணிப்பாளர் நிஸந்த விக்ரமநாயக்க மற்றும் இலங்கை தூதுவராலயத்தைச் சேர்ந்த எம் எம் அப்துர் றஹீம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாக பிரதியமைச்சரின் ஊடக செயலாளர் முகம்மட் சஜீ தெரிவித்தார்.





Leave a comment