குடும்ப வறுமையால் பணிப் பெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சித்த முஸ்லிம் பெண்ணுக்கு –கா-குடி-164 ஏ மகளீர் சங்கம் தொழில் உதவி

kattankudy– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீச்சம் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த  24 வயது முஸ்லிம் பெண்னொருவர் குடும்ப வறுமையால் பணிப் பெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார்.

வெளிநாடு செல்ல முயற்சித்த பெண்ணை அவரின் தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தனது மகள்  குடும்ப வறுமை காரணமாக ஐந்து வயது பிள்ளையையும், இரண்டு அரை  வயது பிள்ளையையும் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இதனை கருத்திக்கொண்ட காத்தான்குடி  பொலிசார் காத்தான்குடி 164 ஏ மகளீர் சங்கத்தை தொடர்பு கொண்டு இவருக்கு வெளிநாடு செல்லாமல் இங்கிருந்து உழைப்பதற்கு வசதிகளை செய்யும் படி பணித்து,  இன்று திங்கட்கிழமை மாலை  வெளிநாடு செல்ல முயற்சித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற 164 ஏ மகளீர் சங்க பிரதிநிதிகள் இவரின் தொழில் உதவிக்காக ஒரு பரித்திமனையையும், பாய் இழைப்பதற்கான பன்னும் 164 ஏ மகளீர் சங்க தலைவி பி.எம்.யு.மஸாக்கீன் மற்றும் உப தலைவி ஏ.ஜென்ஸிலா, உப செயலாளர் ஏ. சம்ஸூன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டதோடு மட்டுமன்றி, வறுமை காரணமாக இருந்த இன்னொரு பெண்னெருவருக்கும் தொழில் உதவியாக பரித்திமனையையும், பாய் இழைப்பதற்கான பன்னும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த 164 ஏ மகளீர் சங்கம் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kattankudy

Published by

Leave a comment