கிண்ணியா: நடந்து முடிந்த கிண்ணியா இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போடியிட்டு 182 மேலதிக வாக்கு வித்தியாசத்தில் கிண்ணியா இளைஞர் பாராளுமற்னற உறுப்பினராக தெரிவாகியுள்ள ஏ.ஆர்.எம்.சினோஸிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம்.ஹில்மி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகும். அந்த வகையில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலானது அவர்களின் வருங்கால துடிப்பு மிக்க செயற்பாட்டிற்கு உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை. கிடைத்திருக்கும் இந்த வெற்றியினை நல்ல முறையில் பயன்படுத்தி செயற்பட வேண்டும் என தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a comment