ஆரையம்தி பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கூறி மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஆரையம்தி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆரையம்தி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பற்று ஆரையம்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர் திருமதி.வாசுகி அருள்ராஜாவை இந்த வாரமிருந்து திடிர் இடமாற்றப் படுவதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிப்பதாகவும்; அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்து மண்முனைப்பற்று ஆரையம்பதி மகளீர் அமைப்புக்கள் இணைந்து இன்று காலை சுமார் 7.30 மணியளவில் மண்முனைப் பற்று ஆரையம்தி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அதன் முன்பாக மட்டக்களப்பு-கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதி நேர்மை உள்ள அரச அதிகாரியை இடம் மாற்றாதே,எமது பிரதேச செயலாளரை இடம் மாற்றாதே,அரச அதிகாரிகளை நேர்மையாக கடமையை செய்ய விடு, மாற்றாதே மாற்றாதே பிரதேச செயலாளரை இடம் மாற்றாதே,அரசியல் பழி வாங்காதே,ஹிஸ்புல்லாஹ்வே ஆரையம்பதி எமது பிரதேசம் இதில் வை வைக்காதே, ,ஹிஸ்புல்லாஹ்வே நேர்மையும் ,நீதியும் உள்ள அரச அதிகாரியை மாற்றம் செய்யாதே, ஹிஸ்புல்லாஹ்வே இனத்துவேஷத்தை உண்டு பண்ணுவதை நிறுத்து போன்ற சூலோகங்களை ஏந்தி கோஷம் எழுப்பிய வன்னம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ???????????????????????????????

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்பாட்டம் இடம்பெறும் இடத்திற்கு அருகாமையில் வேளைக்காக வந்த அரச ஊழியர்கள் வீதியில் நின்ற காட்சிகள் எமது கெமராக்களில் பதிவானது.

???????????????????????????????

தற்போது ஆர்பாட்டம் இடம்பெறும்  குறித்த இடத்தில் பொலிசாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment