ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் கடிதம்

urgent இர்ஷாட் ரஹ்மதுல்லா

கொழும்பு: தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு  அவசர வேண்டுகோளடங்கிய கடிதமொன்றை அனுப்பவுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜய மொன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு திரும்ப இருந்த நிலையில்   இன்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக தமது பயணத்தினை இடை நிறுத்திக்  கொண்டு நாடு திரும்பிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்இகைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில்  இந்த முடிவுமேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கிடையில் தோன்றியுள்ள அச்ச நிலை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள் குறித்தும் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக ஆசாத் சாலியினை கைது தொடர்பில் எற்பட்டுள்ள நிலையினை கவனத்திற் கொண்டுஇஅவரை உடனடியாக விடுதலை செய்வதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவுபடுத்தி அவசர கடிதமொன்றினை எழுதுவது குறித்தும் இந்த கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்இஏனைய முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்இதேசிய காங்கிரஸ் ஆகியன இவ்விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் அவசரமாக அக்கட்சிகளுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வது குறித்தும் இங்கு தீர்மாணிக்கப்பட்டதாகவும்  செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கூறினார்.

முன்னால் மநாகர சபை பிரதி தலைவர் ஆசாத் சாலி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட செய்தி கேள்வியுற்றதும்இதானும்இதமது கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஹூனைஸ் பாருக் சகிதம் அங்கு சென்று வைத்தியருடன் கலந்துரையாடியதாகவும், இது குறித்து கட்சியின் தலைவருக்கு தொலைபேசி மூலம் எடுத்துரைத்ததினையடுத்துஇதலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று இந்த உயர் பீட கூட்டத்தை கூட்டுமாறும்,  தான் உடனடியாக தனது அனைத்து வெளிநாட்டு நிகழ்ச்சிகளை இரத்து செய்து விட்டு நாடு திரும்பவதாகவும் தமக்கு அறிவித்ததனையடுத்து இந்த கூட்டம் இன்று கூட்டப்பட்டதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறினார்.

Published by

Leave a comment