இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் – சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Yourkattankudy
Yourkattankudy

பழுலுல்லாஹ் பர்ஹான்

சாய்ந்தமருது: இலங்கையின் 2வது இளைஞர் பாராளுமன்றத்திற்கு 365 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெறுகின்றது.

இதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று பிரதேச செயலக காரியாலயத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் மேற்பார்வையின் கீழ் இளைஞர் சேவை அதிகாரி எம்.ஹாறூன் தலைமையில் நடைபெறுகின்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டதுடன் 20 இளைஞர் கழகங்களிலிருந்து 1017 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இத்தேர்தலில் இளைஞர்களும், யுவதிகளும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment