ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும்- ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக்

mubarak– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின்  ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் மத அடக்கு முறைகளுக்கும் எதிராக மிகவும் துனிகரமாக குரல் கொடுத்து உலகரியச் செய்தமைக்காகவே ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார் இது அரசாங்கத்தின் ஜனநாயக மீறலும் உச்சக்கட்ட சர்வதிகாரமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக் கொண்டு வாய் திறந்து பேச முடியாத கையாளாகாத முஸ்லிம் தலைமைகளுக்கு மத்தியில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகளை எதுவித சுயநலங்களும் இல்லாது எதிர்த்து குரல் கொடுத்தார் ஆஸாத் சாலி. அவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் பேச்சுச் சுதந்திரத்தினை அரசாங்கம் முழுமையாக நசுக்கியுள்ளது.

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளையும் காலச்சார விலுமியங்களையும் பேனிப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள அரசாங்கம் ஜனநாயகத்திற்கு முரனாக பௌத்த தீவிரவாத குழுக்களின் பின்புலத்தில் இருந்து கொண்டு அவர்களை ஏவி விட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை திட்டமிட்டு நசுக்கிய போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் ஒருவர் ஆஸாத் சாலியாகும் அவரை உண்மைக்குப் புறம்பான குற்றச் சாட்டுக்களை சுமத்தி கைது செய்ததன் மூலம் அரசாங்கம் தனது கொடுங்கோல் ஆட்சியை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.

ஆஸாத் சாலியின் கைது ஒரு முடிவல்ல ஆரம்பமே இதன் பின்னனியில் மேலும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் றகுமான் போன்ற இன்னும் பலர் கைது செய்யப்படலாம் இவ்வாரான கைது நடவடிக்கைகள் மூலம் அரசு முஸ்லிம் அரசியல் தலைமைகளை அச்சுறுத்த முயல்கின்றது.

அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் போலியாக அல்கைதா இயக்கம் என முத்திரை குத்தி கைது செய்யப்படுவார்கள் என்ற ஒரு செய்தியை அரசு ஆஸாத் சாலியின் கைது மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் உரிமைகளை வென்றுதருவோம் என பசுப்பு வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற்றுக் கொண்டு அரசாங்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளை அனுபவித்துக் கொண்டு மௌனமாக இருக்கின்ற அரசியல் தலைமைகளே ஆஸாத் சாலியின் கைது விடயத்திற்கு பின்புலத்தில் இருந்து இருக்கலாம் எனவும் நான் சந்தேகிக்கின்றேன்.

அது உண்மையில்லையாயின் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆஸாத் சாலியை விடுதலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment