மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெற்று வருகின்ற ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நண்பகல் 12 பன்ணிரண்டு மணிவரை அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் படி
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 378 வாக்குகளும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 300 வாக்குகளும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 463 வாக்குகளும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 200, வாக்குகளும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 81 வாக்குகளும், ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 320 வாக்குகளும, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 112 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர் முரளி தெரிவித்தார்.

Leave a comment