மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளின் விபரம்லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் இன்று பிற்பகல் 4 மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் படி, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 997 வாக்குகளும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 551 வாக்குகளும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 523 வாக்குகளும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 394, வாக்குகளும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 268 வாக்குகளும் , ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 563 வாக்குகளும, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 260 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர் முரளி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகள் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பதிவாகியுள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்ட மட்டு – ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர் முரளி மேலும் தெரிவித்தார்.

Leave a comment