காத்தான்குடி நகரசபையினால் ஏ.எல்.எஸ் மாவத்தையில் குப்பைகளை தரம் பிரித்து இயற்கைப் பசளையாக்கும் நிலையத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் வேலைகள் தொடர்பில் நேரில் சென்று பார்வை

 

Yourkattankudy
Yourkattankudy

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையினால் காத்தான்குடி-6 ஏ.எல்.எஸ் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குப்பைகளைதரம் பிரித்து இயற்கைப் பசளையாக்கும் நிலையத்தின் (Compost Plant) வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதால் இதனை பார்வையிடுவதற்காக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ‘பிலிசறு’ பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இன்று சனிக்கிழமை வருகைதந்திருந்தனர்.

மேற்படி உத்தியோத்தர்களுடன் காத்தான்குடி நகரசபையின் நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர், நிர்மாண வேலை அத்தியட்சகர்,தொழில்நுட்பஉத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் சென்று பார்வையிட்டனர்.

இதன் போது மேற்படி திட்டத்தை பார்வையிட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் வேலைகள் தொடர்பில் பாராட்டுக்களைதெரிவித்ததோடு மட்டுமன்றி நிலையத்தினை கிழக்குமாகாணத்திற்குரிய திண்மக் கழிவுமுகாமைத்துவ பயிற்சி நிலையமாக மாற்றுவது தொடர்பாகவும் தங்களது ஆலோசனைகளை வழங்கிச் சென்றனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment