4000 கிராம சேவகர்களை இணைக்க திறந்த போட்டிப் பரீட்சை இன்று

govகொழும்பு: நாடளாவிய ரீதியில் 4000 கிராம சேவகர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை இன்று நடைபெறுகிறது. நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 752 நிலையங்களில் இந்த திறந்த போட்டிப் பரீட்சை நடைபெறுவதுடன் 98,000 பரீட்சார்த்திகள் பரீட்சையில் பங்கேற்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

இம்முறை 98,000 பேர் கிராம சேவகர் பதவிக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்ததுடன் அவர்கள் அனைவரும் திறந்த போட்டிப் பரீட்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

போட்டிப் பரீட்சையின் பெறுபேறு களையடுத்து தகைமையான புள்ளியைப் பெற்றுக்கொள்பவர்கள் நேர்முகப் பரீட்சையொன்றுக்குத் தோற்றுவதன் மூலம் புதிய கிராமசேவகர் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இலக்காகக் கொண்டு இம்முறை சிங்களம் தமிழ் இரு மொழிகளிலும் போட்டிப் பரீட்சை நடைபெறுகின்றன. தமிழ் மொழி மூலம் தேர்ந்தெடுக்கப்படு வோர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள கிராம சேவகர் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனரென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது.

அரசாங்கம் கடந்த இரண்டு வருட காலத்தில் 4000ற்கும் மேற்பட்ட கிராமசேவகர்களுக்கு நியமனம் வழங்கியுள்ளது.

வருடாந்தம் ஓய்வுபெற்றுச் செல்வோரின் வெற்றிடங்கள் உட்பட தற்போது 4000 வெற்றிடங்கள் நாடளாவிய ரீதியில் நிலவுவதாகவும் விரைவில் இந்த வெற்றிடங்களை நிரப்பும் நோக்கிலேயே அதற்கான துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மாவட்டங்கள் தோறும் விஜயம் செய்த போது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கிராமசேவகர்கள் வெற்றிடம் காரணமாக எதிர்கொள்ள நேரும் அசெளக ரியங்கள் சம்பந்தமாக தம்மிடம் தெரி வித்துள்ளதைக் கருத்திற்கொண்டு வெகு விரைவில் இந்த வெற்றிடங்களை நிரப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

-தினகரன்

Published by

Leave a comment