வலது குறைந்தோரை மேம்படுத்தும் வலைப்பின்னல் கலந்துரையாடல்

– ரைஸ்

n 1மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்திலுள்ள வலது குறைந்தோரை உள்ளடக்கிய மேம்பாட்டுக் கல்வி (Inclusive Education) வழங்குதல் மற்றும் வலது குறைந்தோரை இலக்குக் குழுக்களாக கொண்ட அமைப்புக்களுக்கிடையிலான வலைப்பின்னலை ஏற்படுத்தல் போன்ற நோக்கத்திற்காக கிழக்குமாகாணத்தில் உள்ள வலது குறைந்தோருக்கு சேவை வழங்கும் அமைப்புக்களுக்கிடையிலான கூட்டம் அண்மையில்  மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் கல்வி (Inclusive Education ) தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு இது தொடர்பான முதன்மை பயிற்றுவிப்பாளர்களுக்கான வதிவிட பயிற்சியினை வெளிநாட்டு வளவாளர்களினால் பயிற்சி வழங்குவதற்கும், வலது குறைந்தோரை இலக்குக் குழுக்களாக கொண்ட அமைப்புக்களுக்கிடையிலான வலைப்பின்னல் ஒன்றை இவர்கள் மூலமாக ஏற்படுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

n 1

Solidarite Laiqueநிறுவனத்தின் பரிந்துரை இணைப்பாளர்  அப்பாஸ் ஹிதாயத்துள்ளாஹ்வின் ஏற்பாட்டில் அந்நிறுவன தேசிய இணைப்பாளர் ஏ.ஆர்.எம். ஸைபுள்ளாஹ்வின் தலைமையில் இடம் பெற்ற  இக்கூட்டத்திற்கு பிரதம விருந்நினராக கிழக்குமாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் திரு. என். மணிவண்ணன்,  விசேட விருந்தினராக CBTD நிறுவனத்தின் பிரதம நிரைவேற்றுப் பணிப்பாளர் கித்சிரி தர்மபிரிய மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணியகத்தின் விசேட கல்வி இணைப்பாளர் எஸ். ஜனர்தன் இவர்களுடன் பங்காளர் நிறுவன பிரதி நிதிகள்  அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகளும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

n 4

n 5

Published by

Leave a comment