‘மஹிந்த அரசின் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது’: அஸாத் சாலியை விடுதலை செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

IMG_4692– கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு: கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி மேயரும்,  தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலியினை விடுதலை செய்யுமாறு கோறி இன்று  வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகையினையடுத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

கொழம்பு தெவட்ட கஹா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பான இந்த பேரணி  கொள்ளுப்பிட்டி பாதை வழியாக மாநகர சபை சுற்று வளைவின் ஊடக பயணித்து மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தது.

நுாற்றுக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் சிறிது நேரம் வாகன நெறிசல் காணப்பட்டது.கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆசாத் சாலியின் கைதினை வண்மையாக கண்டித்து, அரசாங்கத்துக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தி சென்றனர்.

IMG_4692

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்இமொகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், விக்ரமபாகு கருணாரத்ன, கொழும்பு மாநகர மேயர் எம்.ஜே.எம்.முசம்மில்,

முன்னால் வடமேல்மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்-

IMG_4694

இன்று அரச பயங்கரவாதம் தலைதுாக்கியுள்ளது.அதனது ஒரு வடிவமாகவே அஸாத் சாலி கைதினை பார்க்கின்றோம். அதுவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இவ்வாறானவர்களை கைது செய்வதன் மூலம் அரச ஆதிக்கம் தலைதுாக்கியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஆசாத் சாலயினை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கொழும்பு மாநகர மேயர் எம்.ஜே.எம்.முசம்மில் இங்கு பேசும் போது-

IMG_4696

இந்த கைதினை ஜக்கிய தேசிய கட்சி வண்மையாக கண்டிக்கின்றது.ஆசாத் சாலி அவர்களை ஒரு பயங்கரவாதி போன்று இந்த அரசாங்கம் கைது செய்துள்ளது.இது அனுமதிக்க முடியாது.மஸ்லிம்களுக்காக அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதற்கு எதிராக பேசுவதற்கு மக்களை அச்சப்படுத்தும் அரசின் ஒரு வேலையாகத்தான் இதனை நாம் பார்க்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு ஆசாத் சாலி உழைத்துள்ளார்இஅரசின் கொள்கை பிடிக்கவில்லை என்பதால் அதிலிருந்து வெளியேறி ஜனநாயக ரீதியான போராட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.இதனை தடை செய்யும் வழியில் இந்த அரசு அவரை கைது செய்துள்ளது என்றும் கூறினார்.

மாகாண சபை உறுப்பினர்  விக்ரமபாகு கருணாரத்ண கூறுகையில் –

IMG_4697

மஹிந்த அரசின் அடாவடித்தன்ஙகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது.ஆசாத் சாலி எந்த குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பள்ள பள்ளிவாசல் மீது தாக்கப்பட்டது முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. எதிர் கட்சி அரசியல் வாதிகள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இது தான் இந்த அரசாங்கத்தின்   சாதனைகளாகும்.வடக்கில் தமிழ்,முஸ்லிம் மக்களது காணிகளை பாதுகாப்பு நலன் கருதி பெறுவதாக கூறி அவற்றை அரசாங்கம் அபகரிக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளது. இவைகள் கம்பணி்க் காரர்களுக்கு வெகு விரைவில் இந்த அரசாங்கம் வழங்கும் என்று கூறிய அவர்
ஆசாத் சாலியினை இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் விடுதலை செய்யவிட்டால், எமது போராட்டம் தொடரும் என்றும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்

Published by

Leave a comment