கொழும்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம்!
-AK77
கொழும்பு: நேற்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஸாத் சாலி, கடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுத்த நிலையில், தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநீதியான விசாரணைக்கு எதிராக உண்ணாவிரத்தை மேற்கொண்டிருந்தார்.
அஸாத் சாலியின் குடும்பத்தினர் கொண்டு சென்ற உணவையும், காவற்துறையினரால் வழங்கப்பட்ட உணவையும் உட்கொள்வதற்கு மறுத்த நிலையில், அவரது உடல் மோசமாக மாறிச்சென்றுகொண்டிருந்ததை அவதானித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மருத்துவப்பிரிவு, அஸாட்சாலியை தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்து, அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வாரம் பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பொதுபல சேனா அமைப்பு தொடர்ர்பில் நேற்று கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் லக்ஸ்மன் உலுகல்ல, அந்த அமைப்பு சமூகங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமை, இனவாதத்தை தூண்டியமைக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டார் – அரசாங்கம்அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமை மற்றும் இனவாதத்தை தூண்டியமை ஆகியவற்றுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் அசாத் சாலி செயற்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார். அசாத் சாலி, கொலன்னாவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார். அசாத் சாலியிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரகைளை நடத்தி வருவதாக ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அஸாட் சாலியின் விடுதலைக்காக கொழும்பிலும், அக்குரணையிலும் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம்கள் மேற்கொண்டிருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் அஸாட் சாலிக்கு விசுவாசமான பிற மத சகோதரர்களும் கலந்து, தங்களது ஆதரவுகளை அஸாட் சாலிக்கு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம்!
இன்று கொழும்பில் இடம்பெற்ற எதிர்பார்க்காத ஆர்ப்பாட்டத்தால், கொழும்பு அரசியலில் ஆட்டம் கண்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. கொழும்பு முஸ்லிம்களின் பெரும்பான்மையானவர்கள் ஐ.தே.க. இற்கே வழமையாக ஆதரவு வழங்கி வருவது வழக்கம்.
அண்மைக்காலமாக அரசாங்கத்தின் முஸ்லிம்களின் அக்கரை மீதான கவனக்குறைவுகளால் ஏற்கனவே கொழும்பில் அரசாங்கத்திற்கு பல அழுத்தங்கள் இருந்துவரும் நிலையில், இன்றைய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அவசர கூட்டங்கள் அரசியல் மட்டத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.
![asad_sali_[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/asad_sali_1.jpg?w=100&h=150)
Leave a comment