காத்தான்குடி: காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன் அஷ்ஷெக் அல்ஹாபிழ் மௌலவி பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அரபு மொழி விரிவுரையாளராக கடமையாற்றிவரும் இவர் காலி இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரி மற்றும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி ,காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவருமாவார்.
இவர் காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளரும்,இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி சாலை முகாமையாளருமான ஏ.எல்.பழுலுல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர் திருமதி. பௌசியா பழுலுல்லாஹ் ஆகியோரின் சிரேஷ்ட மகனுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம்:
காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன் அஷ்ஷெக் அல்ஹாபிழ் மௌலவி பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.


Leave a comment