பேனா எடுத்தவனின்
கைகைய முறிப்பதும்
குரல் கொடுத்தவனின்
வாழ்வை சிறைப்படுத்துவதும்
ஜனநாயக சோசலிச இலங்கை
நாட்டின் புதிய கொள்கைகள்!
போர் ஓய்ந்து
எழில் கொஞ்சும்
இலங்கை நாட்டில்
சிறுபான்மையினத்தின் உரிமைகள்
பேரினக் குழுக்களாலும்
கண்திறவா அரசாங்கத்தாலும்
விறகாய் எரிக்கப்படுகின்றன.
தண்ணீரைக்கொண்டு அனைக்கவேண்டிய
பெயர்தாங்கி முஸ்லிம் அமைச்சர்கள்
எண்ணெய்யை ஊற்றிவிட்டு
வேடிக்கையும் பார்க்கின்றனர்.
வாக்களித்த மக்களோ
வாய்திறக்க முடியாமல்
வாழ்விழந்து தவிக்கின்றனர்
வாழத்தான் விடுங்களேன்.
பாலியல் வன்முறைகளும்
விலைவாசிகளும்
மத உரிமை நசுக்கல்களும்
நாறிப்போய் விட்டது
நானிலமும் அறிந்துவிட்டது
மேடைப்பேச்சுக்களும்
அரசியல் தந்திரங்களும்
இனிமேலும் எங்களுக்கு
வழிகாட்டாது இந்நாட்டில்
வாக்கை வைத்து போராடுவோம்
வாழ்க்கைக்காய் ஒன்றிணைவோம்
வாய்மை பேசிட கிளர்ந்தெழுவோம்
வாய்ப்பூட்டை உடைத்தெறிவோம்
இத்தனை கொடுமைகளையும்
சகித்துக்கொண்டு
நான் இருந்தாலும்…..
வீடு சென்றதும் வாப்பா கேட்காரு
வீதிக்கு சென்றதும் நண்பன் கேட்கிறான்
வெளிநாட்டிலிருந்து உறவுகள் கேட்கிறாங்க
‘என்னடா நடக்குது அங்கே?’
![red_eyes__by_havocangel03-d56ilt6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/red_eyes__by_havocangel03-d56ilt61.jpg?w=150&h=100)
Leave a comment