கொழும்பு: நாடளாவிய 334 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இன்று பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இளைஞர் விவகார திறனபிவிருத்தி, அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். இம்முறை தேர்தலில் 335 உறுப்பினர்களும் 77 செனட் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
பிரதமரின் தலைமையில் 13 பேரைக் கொண்ட அமைச்சரவையும் சபாநாயகர், பிரதி சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மார்ச் 31 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் 17-29 வயதுக்குட்பட்ட இளைஞர் சங்க இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்பர். எதிர்பார்க்கப்படும் தகைமைகளைக் கொண்ட எந்தவொரு சங்கத்தின் அங்கத்தவரும் இந்த இரண்டாவது பாராளுமன்றத்திற்கு தெரிவாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இம் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்துள்ளதுடன் 4 ஆம் திகதி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்படவுள்ளன.
இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
– தினகரன்
Leave a comment