– ரைஸ்
கிண்ணியா: தனியார் நிருவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒன்றுகூடல் தொழிலாளர் தினமான நேற்று புதன்கிழமை கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. உழைப்பிற்காக தன் வியர்வையை நிலத்தில் சிந்தி உழைக்கின்ற தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்ற போது அங்கு உரிமைக்கான போராட்டம் ஆரம்பமாகிறது. அந்த வகையில் தொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உரிமைக்கான ஒன்றுகூடலின் போது புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு அதிதியாக சைகா நிறுவன தலைவரும் கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி கலந்து கொண்டார். இதன்போது கிண்ணியா பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சீ.முஸ்இல், சட்டத்தரணிகளான ஏ.எம்.முஹீத், அனிபு லெப்பை நகரசபை முகாமைத்துவ உதவியாளரும் சைகா நிறுவன செயலாளருமான எம்.ஐ. நிஜாம்தீன் மற்றும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களின் உரிமைக்காக இயலுமான உதவிகளை தான் வழங்க காத்திருப்பதாகவும் நகரபிதா தெரிவித்ததோடு அதிதிகளும் தங்களின் உதவிகளை வழங்குவதாக தெரிவித்தனர். நிகழ்வின் இறுதியில் wws தொழிலாளர் சங்க நிருவாகத்திற்கான உறுப்பிகர்ளும் தெரிவு செய்யப்பட்டனர்.
செயலாளர் M.I. நிசார்
உபசெயலாளர் I. தாஹிர்
தலைவர் M.I. றியாஸ்
உபதலைவர் M.P. தொளபீக்
பொருளாளர் U. றியாஸ்
உபபொருளாளர். PA .டீமன்
கணக்குப்பரிசோதகர் A. விபுலானந்தன் மற்றும் மேலதிக 10 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு குறித்த தொழிற்சங்கத்தினை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியின் ஆலோசனைக்கமைவாக தொழிலாளர் தினமான நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



Leave a comment