மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும்; தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களினால் அபகரிப்பதற்கான முயற்ச்சிகள் இடம் பெறுகின்றது-த.தே.கூ. மட்டு .பா-உ. பொன். செல்வராசா –எம்பி.

selvarasa– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும்; தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களினால் அபகரிப்பதற்கான முயற்ச்சிகள் இடம் பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா அதனை தடுத்து நிறுத்துமாறு அரசாங்க அதிபரை கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு-அம்பாரை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வெல்லாவெளி பிரதேசம் கண்ணபுரம் கிராமத்திலுள்ள கண்ணியம்பை காட்டு பகுதியிலுள்ள காடுகள் இதற்காக தற்போது கனரக இயந்திரங்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

 பட்டிருப்பு தொகுதியை சேர்ந்த தமிழர்கள் 1990க்கு முன்னர் கண்ணியம்பை பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்தனர். யுத்த காலத்தில் எதிநோக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக விவசாய செய்கையை கைவிட்டதன் காரணமாக தற்போது அந்த பகுதி காடுகளாக காணப்படுகின்றது. 

தற்போது அமைதியான சூழ்நிவை காணப்பட்டாலும் தமிழ் விவசாயிகள் காடுகளை துப்பரவு செய்து விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. காணி உரிமையாளர்களினால் தெரிவிக்கப்பட்ட புகார்களையடுத்து அந்த பகுதிக்கு தான் நேரில் சென்ற போது காடுகள் துப்பரவு  செய்யப்படுவதைதன்னால் காண முடிந்தது . பிரதேச செயலாளருக்கு தெரியாமலே இது நடக்கின்றது. என்றும் அவர் கூறுகின்றார்.

 காடுகள் துப்பரவு பண்ணும் இடத்தில் இராணுவம்,சிவில் பாதுகாப்பு படை ,சிவில் அதிகாரிகள் மறறும் சில சிங்கள மக்களும் காணப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கும் அவர் இந்த நடவடிக்கையானது தமிழர்களுக்குpர்ய விவசாய நிலங்களை அபகரித்து சிங்களவர்களுக்கு பகிhந்தளிப்பதற்கான முயற்ச்சியாகவே கருத வேண்டியுள்ளது. என்றும் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இந்த விடயத்தை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அதிகாரிகளை அந்த பகுதிக்கு நேரில அனுப்பி விபரங்களை பெற்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை தான் எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment