– விசேட நிருபர்
கொழும்பு: அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலி, இந்தியாவில் அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டிருந்த கருத்துக்களால் பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் இன்று காலை 6:30 மணியளவில் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தங்களது அலுவலகத்துக்கு வருமாறு அஸாத் சாலி அவர்களைக் கேட்டிருந்தது.
நாலாம் மாடிக்கு அவரை அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்ததால், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், அரசியல் உயர்மட்ட உறுப்பினர்களும் அஸாத் சாலிமீது அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில் இக்கைது இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment