லண்டன்: சற்று முன்னர் நிறைவடைந்த ஐரோப்பா கிண்ண கழகங்களுக்கான சம்பியன் (UEFA) இரண்டாவதும் இறுதியுமான அரை இறுதிப் போட்டியில் பார்சிலோனாவை எதிர்த்து பேயர்ன் மியூனிச் எதிர்த்தாடியது.
மிக விறுவறுப்பாக பார்சிலோனா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் 0:3 (0:7) எனும் கோல் அடிப்படையில் பேயர்ன் மியூனிச் கழகம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அரை இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட், டொட்மண்ட் அணியுடன் தனது சொந்த மைதானத்தில் தோல்வியைத் தழுவியது. அரை இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினின் இரு முதல்தர அணிகளான ரியல் மெட்ரிட், பார்சிலோனா கழகங்களும், ஜேர்மனியின் பேயன் மியூனிச், டொட்மண்ட் ஆகிய கழகங்களும் தெரிவாகி இருந்தன.
உலக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பார்சிலோனா இன்றைய போட்டியில் 0:3 (0:7) எனும் கோல் வித்தியாசத்தில் பேயர்ன் மியூனிச் கழகத்துடன் தனது சொந்த மைதானத்தில் படுதோல்வியைத் தழுவியது.
இறுதிப்போட்டிக்கு இரு ஜேர்மனி கழகங்களான டொட்மண் மற்றும் பேயர்ன் மியூனிச் ஆகிய கழகங்கள் தெரிவாகி இருக்கின்றன. இம்மாதம் 25ம் திகதி, லண்டன் வெம்பிளி மைதானத்தில் மாலை 7:45 மணிக்கு ஐரோப்பா கழகங்களுக்கான இறுதிப்போட்டி இடம்பெறும். இப்போட்டியை 90,000 பார்வையாளர்கள் மைதானத்தில் நேரடியாக பார்ப்பதுடன், பில்லியன் கணக்கான மக்கள் நேரடி ஒளிபரப்பு மூலமாகவும் காணவுள்ளனர்.
![Robben-celebrate_2938131[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/robben-celebrate_29381312.jpg?w=150&h=112)
![Robben-celebrate_2938131[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/robben-celebrate_29381312.jpg?w=630&h=472)
![Robben-goal_2938134[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/robben-goal_29381341.jpg?w=630&h=472)
Leave a comment