தொழிலாளர் புகழ் பாடும் மேண்மை தங்கிய மேதினத்தில் ஊழியர் உரிமைகள் பலமாகட்டும் – பிரதியமைச்சர் – ஹிஸ்புல்லாஹ் மேதின வாழ்த்துச் செவ்வி

hizbullah[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக கொண்டாடப்படு;ம் மே தினமாகிய இன்று தொழிலாளர்கள் உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து அவர்களது பிரச்சனைகளையும் அவர்களுடை கோரிக்கைகளையும் முன் வைத்து நடத்துகின்ற தொழிலாளர் தினத்திலே அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமையடைவதாக பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம். எல். ஏ .எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

 குறிப்பாக இலங்கையில் இருக்கின்ற தொழிலாளர்களும் இன்று தமது வாழ்க்கைத் தரத்தினை நகர்த்துவதிலே பொரும் இன்னல்ப் படுவதாக தெரிவித்த பிரதியமைச்சர் தொழிலாளர்களின் நலன்களை முன்னேற்றுவதற்காக அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் பல்வேறு திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் .

 தொழிலாளர் தினம் என்பது வெறுமனே ஒரு கோசமாகவும் விழாவாகவும் இல்லாமல் தொழிலாளர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்கின்ற அவர்களது தொழிலுக்கு ஏற்ற ஊதியம் வழங்குகின்ற ஒரு நல்ல தினமாகவும் அவர்களுடையவாழ்வில் சந்தோசம் கொளிக்கும் நாளாகவும் இத்தினம் அமைய வேண்டும் என்றும் பிரதியமைச்சர் தனது மேதின வாழ்த்துச் செவ்வியில் தெரிவித்தார்.

Published by

Leave a comment