பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பொரிஸாரினால் தேடப்பட்ட காத்தான்குடி ஆளுங்கட்சி நகரசபை உறுப்பினர் நீதிமன்றில் சரண்

???????????????????????????????-பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மாணவி தொடர்பில் பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டு சம்பந்தமாக காத்தான்குடிப் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினறும் பிரபல பொருளியல் பாட தனியார் வகுப்பு ஆசிரியருமான பாக்கீர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த இவரை எதிர்வரும் 08ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பான அடுத்த வழக்கு எதிர்வரும் 08ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment