நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் நடாத்தப்பட்ட ஐ.ஏ.எஸ் 2012 பரீட்சையில் தோற்றிய காத்தான்குடி யுனிக் கல்லூரியின் 5 மாணவர்கள் சித்திபெற்று சாதனை!

unic college (2)– டீன் பைரூஸ்

காத்தான்குடி: உலகப் புகழ்பெற்ற அவுஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் நடாத்தப்பட்ட ஐ.ஏ.எஸ் 2012 பரீட்சையில் தோற்றிய  காத்தான்குடி யுனிக் கல்லூரியின் 5 மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆங்கில மொழியில் சர்வதேச ரீதியில் வருடா வருடம் நடைபெறும் இப்பரீட்சையில், 2012 ல் இடம்பெற்ற குறித்த பரீட்சைக்கு தோற்றிய காத்தான்குடி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்து எமது மண்ணுக்கும் பெருமைசேர்த்திருக்கின்றனர்.

1. எம்.எப்.எப். ஹம்னா ஆங்கில மொழி  ‘டி’ சித்தி

2. எம்.எப். ஸதா ஆங்கில மொழி  ‘டி’ சித்தி

3.எம்.என்.எம். ஸைனப் ஆங்கில மொழி  ‘டி’ சித்தி

4. ஏ. கதீஜா கணிதம் ‘சி’ சித்தி

5. எம். ஏ. அப்துல்லாஹ் கணிதம் ‘சி’ சித்தி

முதலாம் ஆண்டு தொடக்கம் ஆங்கில மொழி மூலமாகவே இக்கல்லூரியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால்,  சரளமாகவே இம்மாணவர்கள்  ஆங்கிலம் பேசுவதற்கு வழிகாட்டப்பட்டு வருவதுடனுன் நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.

சிறந்த ஆசிரியர் குழுவைக் கொண்டு கல்வி சேவையாற்றி வரும் யுனிக் கல்லூரிக்கு  டொக்டர் ஏ.எச்.ஆர் மதனி அவர்கள் தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment