யார் இவர்கள்…?

Yourkattankudy

– அபூ இஸ்ஸத்

முன்னொரு காலத்தில்
நாங்கள் யார்? நீங்கள் யார்?
என்று இரு குழுக்கள் இருந்தன
எமது காத்தான்குடியில்..

‘உலமா’ என்றும்
‘முர்தத்’ என்றும்
சந்திக்குச் சந்தி
ஓங்கி ஒலித்தன சண்டித்தனங்கள்…

திருமண பந்தல்களிலும்
மரண இல்லங்களிலும்
கொள்கைப் பிரிவுகளால்
பிணக்குகள் பல தோன்றின…

மார்க்கட்டில் மாட்டிறைச்சி வாங்குவதற்கும் கூட
வியாபாரி உலமா குழுவா? அல்லது முர்தத் குழுவா?
என்றெல்லாம் யோசித்து
இறைச்சி வாங்காமலேயே
கறுவாட்டைவாங்கி
வெள்ளிக்கிழமைகளில்
கூட சமைத்துண்டதுண்டு!

‘ஞானச்சுரங்கம்’ உம்,
‘ஹமவேஸ்த்’ உம்
வெளிக்கிளம்ப…
உதயம் பெற்றது
‘ஹமவேஸ்த் அது ஒரு வேஸ்த்’.

பாடசாலைகளிலும், தெருக்களிலும்
ஏன்… குடும்பத்தில் கூட
விவாதித்து
இன்னும் பல உறவுகளையும்
இழந்த நாட்கள் அவை…

போட்டோ எடுக்காதீங்க….
போட்டோவுக்கு போஸ்கொடுக்காதீங்க..
திருமண வீட்டில் வீடியோ எடுக்காதீங்க…
‘ஹாய்’, ‘பாய்’ சொல்லாதீங்க..
கடற்கரைப் பள்ளி போகாதீங்க
‘பேர்த்டே’ கொண்டாடாதீங்க..
மிம்பர்கள் முழங்கிய காலம் அது….

திருமணச் சட்டங்கள்
புதிதாக அமுலுக்கு வந்த
அந்த நடைமுறைகளையும்
தூக்கி எறிந்து
இன்றும்
காவீன், வீட்டுத் திருமணம்
ஏன் சீதனம் ‘என்விலப்’
என்று தொடர்கிறது அந்தக் கூட்டம்

இன்றோ கண் முன்னாள் செய்கின்றனர்
தடுக்கத்தான் ஆளில்லை
அரசியல் எதைத்தான் விட்டது!

தடுத்து நிறுத்தாமல் தடுமாறியதால்
மூன்றாம் குழு உதயமாகின….
பிற்காலத்தில்…

ஊரில் சத்தியத்துக்காக
பல பிரிவுகளாக பிரிந்தனர்..பலர்.
மௌலீது ஓதாதீர்கள்
கந்தூரி கொடுக்காதீர்கள்
என்று துண்டுப்பிரசுரம்
வெளியிட்டு மக்களை
நேர்வழிப்படுத்தியது உலமா சபை!

மார்க்க பிளவுகள்
ஊரை எரித்தன!
இதனால் எழுந்தது அரசியல்!
எழுந்து நின்றனர் பிரிவினைவாதிகள்!!

மறைமுகமான கட்டுக்கோப்புடன்
கடைப்பிடித்த அவர்களின் கொள்கையை
உலகுக்கு பறைசாட்டி,
சரித்திரம் படைத்தது அரசியல்!

ஊர் ஒற்றுமையில் பிளவுகள் களைந்தன.
இரு குழுக்களும் இணைந்தன!

இவர்கள் அவர்களையும்
அவர்கள் இவர்களையும்
நன்மை தீமைக்கு அழைத்து
கூடி மகிழ்கின்றனர்-ஆரத்தழுவுகின்றனர்.

பத்றிய்யாப் பள்ளிக்குள்
உலமாக்கள் துஆப்பிரார்த்தனை!
பம்பரதெனியாவில் மேடைப்பேச்சு!!
இதனாலோ என்னவோ
மார்க்க முரண்பாடற்ற ஊராக
காத்தான்குடி திகழ்கிறதாம்!

இவர்களின்
தெளிவில்லாத மாரக்கக் கொள்கை
முரண்பாட்டிலும்-ஒற்றுமையிலும்
பாவம் மக்கள்…சிக்கித் தவிக்கின்றனர்.

இப்படி ஒற்றுமை எனும் மாயையில்
ஊர் இருக்கும்போது…
ஜாமியுழ்ழாபிரீனில் மட்டும்
ஏன் அவர்களுக்கு மறுப்பு?
ஊரே இடம் கொடுத்துவிட்டதே!

பின்னர் நிர்வாகத்தில் மாத்திரம்
இவர்களைத் தடுப்பது யார்?

யார் இவர்கள்?

சமூகம் மௌனிப்பது ஏனோ??
விடைதேடுகிறேன்…புரியாமலே…..!

வரிகளுக்குப் பொறுப்பாளன்:  அபூ இஸ்ஸத்

Published by

One response to “யார் இவர்கள்…?”

  1. mohmedrislan Avatar

    தற்போது குபா வாசிகளின் தொல்லை அதிகரித்துவிட்டதே

Leave a reply to mohmedrislan Cancel reply