பாதையில் வீழ்ந்த மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது

kattankudy– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி:  புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்றிரவு 08.15 மணியளவில் மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது.

ஸ்ரீ.ல.மு.கா காத்தான்குடிக் காரியாலயத்தின் காணியிலிருந்து முறிந்து விழுந்த குறித்த மரத்தை உடனடியாக வெட்டும் இயந்திரம் மூலம் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஸ்ரீ.ல.மு.கா உயர்பீட உறுப்பினறும் திறன் அபிவிருத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.முபீனுக்கு சொந்தமான காணியிலிருந்தே குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

முறிந்து விழுந்த குறித்த மரத்தை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு குறித்த மரம் அகற்றப்பட்டதனால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Published by

Leave a comment