டைவிங் ரைகன்ஸ் அணி இறக்காமம் பிறீமியர் லீக் சம்பியனானது

Photo3974– பழுளுல்லாஹ் பர்ஹான்

அம்பாறை: அம்பாறை இறக்காமம் பிறீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இறக்காமம் அஷ்ரஃப் மத்திய கல்லூரி குளக்கரை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அணிக்கு 11 பேர் 10 ஓவர் கொண்ட இறுதிப் போட்டியில் வுளு வேல்ஸ் அணியை எதிர்த்து டைவிங் ரைகன்ஸ் அணி விளையாடியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டைவிங் ரைகன்ஸ் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வுளு வேல்ஸ் அணியினர் 10 முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவினர்.

Photo3974

இவ்விறுதிப் போட்டியில் டைவிங் ரைகன்ஸ் அணியினர் 9 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறக்காமம் பிறீமியர் லீக் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து சம்பியனானது.

இவ்விறுதிப் போட்டி நிகழ்வுகள் இறக்காமம் பிறீமியர் லீகின் முகாமையாளரும், இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினருமான எம்.எல்.முஸ்மி தலைமையில் நடைபெற்றது.

Photo3975

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், இறக்காமம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் மௌலவி யூ.கே.ஜெபீர், பிரதேச சபையின் உறுப்பினர்களான யூ.எல்.எம்.ஜிப்ரி, எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

Photo3977

இதன்போது வெற்றி பெற்ற கழகங்களுக்கான பரிசில்களும் வெற்றிக் கிண்ணங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

Photo4003

Photo4015

Published by

Leave a comment