செறோ ஸ்ரீ லங்கா அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு

kalmunai (3)– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: கல்முனை செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் புத்தாண்டு நிறைவும், அங்கத்தவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி றினோஸ் ஹனீபா தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இந்நிகழ்வுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் இணைப்பாளர் ஏ.வீ.தாவூத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் சாய்ந்தமருதுத பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபுள்யூ.ஏ.ஹபார் உள்ளிட்ட உயரதிகாரிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

kalmunai (2)

இதன்போது கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அமைச்சர் அதாவுல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் செறோ அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

kalmunai (3)

kalmunai (4)

Published by

Leave a comment