வாழைச்சேனையில் எஸ்.எப்.ஜி.87 ரக வெடிகுண்டு மீட்பு

sfg82singaporecraig[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

 ஓட்டமாவடி: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிடற்குட்பட்ட ஓட்டமாவடி01, புதிய தபாலக வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் எஸ்.எப்.ஜி.87 ரக வர்க்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை ஓட்டமாவடி01, புதிய தபாலக வீதியில் அமைந்துள்ள அஹமட் லெப்பை முஹம்மட் சமீம் என்பவரின் வியாபார நிலையத்திற்கு முன்பாகவே குறித்த வெடிகுண்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கடைக்கு முன்னாலுள்ள பகுதியை இன்று மாலை துப்பரவு செய்த நிலையிலேயே மண்ணுக்குள் புதைந்த நிலையில் குறித்த வெடிகுண்டு கண்டுபிக்கப்பட்டதாகவும் குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு பொலிஸார் விரைந்து வெடிகுண்டை கைப்பற்றியதாகவும் வியாபார நிலைய உரிமையாளர் அஹமட் லெப்பை முஹம்மட் சமீம் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

sfg82singaporecraig[1]

Published by

Leave a comment