மஞ்சந்தொடுவாய் வடிகான் மூடப்படாமை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையுமில்லை – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

மஞ்சந்தொடுவாய்: மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள வடிகான் மூடப்படாமையினால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் இது தொடர்பாக தான் வீதி அதிகார சபை பணிப்பாளருக்கு கடந்த 20ம் திகதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ. ல. மு. கா உறுப்பினருமான என்.கே. றம்ழான் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு காத்தான்குடி வீதியின் காத்தான்குடி எல்லைப்பகுதியான மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிதாக வடிகான் அமைக்கப்பட்டு மிக நீண்ட காலமாகியும் இன்றுவரைக்கும் அவ்வடிகானுக்கான மூடிகள் இடப்படவில்லை இதனால் வீதியின் இருபகுதிகளிலும் வர்தக நிலையங்கள் அமைத்து வியாபாரம் செய்யும் வர்தகர்கள் தங்களது வியாபாரப் பொருட்களை வர்தக நிலையத்தினுல் எடுத்துச் செல்வதில் மிக அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதே போன்று குறித்த வர்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர்களும் அவ்வடிகான்களை கடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்வதில் கடும் கஸ்டத்தை எதிர் நோக்கி வருவதோடு பாதசாரிகளும் வடிகானை கடந்து செல்வதில் மிகவும் கஸ்டத்தை எதிர் நோக்குகின்றனர்.

சில சமயங்களில் வர்தக நிலையத்தின் உரிமையாளர்களும், பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர்களும் குறித்த வடிகானை கடக்கும் போது இடரி விழுந்து படுகாயம் அடைந்தும் விடுகின்றனர்.

மேலும் குறித்த வடிகான் புதிதாக அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் இன்னும் முழுமையாக சுத்தம் செய்யப்படவில்லை அதாவது வடிகானினுல் காணப்படும் கல், மண் போன்றவைகள் அகற்றப்படாமல் நிறைந்து காணப்படுவதால் அண்மையில் பெய்த மழைநீர் வடிந்தோட முடியாமல் குறித்த வடிகானினுல் தேங்கி நின்று வருகின்றது இதனால் துர்நாற்றம் வீசுவதோடு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் டெங்கு போன்ற நுளம்புகளும் உற்பத்தியாகி வருகின்றது.

மேற்குறித்த விடயங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு காத்தான்குடி பிரதேசத்தின் இரு பகுதியிலும் காணப்படும் வடிகானுக்கு மூடிகள் இட்டு முழுமையாக மூடியுள்ளதைப் போன்று மஞ்சந்தொடுவாய் பகுதியின் பகுதிகளிலும் காணப்படும் வடிகானுக்கும் முழுமையாக மூடியிட ஆவன செய்வதோடு வாடிகானை துப்பரவு செய்து மழை நீர் தேங்கி நில்லாது வடிந்தோடக் கூடிய வகையில் வடிகானுல் காணப்படும் கல் மண் போன்றவற்றை அகற்றி மக்களை பாதிப்பிலிருந்து தடுப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இதுவிடயமாக தங்களுக்கு கடந்த 03.03.2013ம் திகதியன்று காரியாலயத்தில் நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன் ஆனால், இன்று வரைக்கும் அது விடயமாக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment