கஞ்சா குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு 14நாட்கள் விளக்கமறியல்

imagesபழுளுல்லாஹ் பர்ஹான்

மண்முனை: முப்பத்து நான்கு கிலோவும் -700 கிராம் கஞ்சாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் கடந்த (25.4.2013) வியாழக்கிழமை காத்தான்குடிப் பொலிஸாரினானால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை 14நாளைக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாணசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் குற்றங்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கையின் பயனாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.இந்திரனின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜயவர்த்தன, மற்றும் எஸ்.ஐ.உபாலி, ஸார்ஜன் ஜெயசுந்தர, ஸார்ஜன் பத்மசேன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான விதானகே, மற்றும் ஜயரத்ண ஆகியோர் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்தனர்.

இவர்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிலோ 700கிராம் கஞ்சாவை இதன் போது கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தத்து குறித்த வீட்டை சோதனை செய்த பொலிசார் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிலோ 700கிராம் கஞ்சாவை இதன் போது கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment