உம்ரா யாத்திரைக்கு சென்றவர் விமானத்தில் மரணம்!

kahbaசென்னை:  மலேசியாவில் இருந்து சவூதி அரேபியா சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமான் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. ஆனால் டாக்டர்கள் சோதனையிட்டபோது அவர் ஏற்கனவே  மரணித்திருந்தது தெரிய வந்தது.

கோலாலம்பூரில் இருந்து ஜித்தா நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் 260 பயணிகள் இருந்தனர். அதில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமத் (86) என்பவரும் இருந்தார். இவர் தனது உறவினர்களுடன் மக்காவுக்கு புனித உம்ரா யாத்திரை செல்வதற்காக பயணம் செய்தார். சென்னை வான் எல்லையில் நேற்று மாலை 6.30 மணிக்கு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது அஹமதுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உறவினர்கள் விமான பணியாளர்களிடம் தெரிவிக்கவே, சென்னை விமான நிலையத்தை விமானி தொடர்பு கொண்டு, விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டதையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியவுடன் தயாராக இருந்த டாக்டர்கள் குழு உடனே விமானத்திற்கு விரைந்து அஹமதை சோதித்தனர்.

ஆனால், அவர் வானிலேயே  மரணித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதே விமானத்தில் அஹமதின் உடல் ஜித்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 1.30 மணி நேரம் தாமதத்துக்குப் பின் இரவு 8 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

(OIT)

Published by

Leave a comment