இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கல்விமையக் கட்டிடத் திறப்பு விழா

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கல்விமையக் கட்டிடத் திறப்பு விழா நாளை திங்கட்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சுபைர், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபிர், ராபிததுந் நழிமிய்யீனின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துர் ராஸிக் நளீமி மற்றும் பல அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

291/2இவாவிக்கரை வீதி, காத்தான்குடி 01 எனும் முகவரியிலே குறித்த காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கல்விமையக் கட்டிடம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Yourkattankudy
Yourkattankudy

Published by

Leave a comment