ஹச் (HUTCH) நிறுவனத்தினால் சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் புரஜக்டர் மூலம் பயான் நிகழ்ச்சி

 

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஹச் (Hutch) நிறுவனம் நாடளாவிய ரீதியில் தனது சேவையை விஸ்தரித்து வருகிறது. அதன் பயனாக தெற்காசியாவிலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தனது சேவையை ஆற்றி வருகின்றது.

இன்று சனிக்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆங்கிலத்தில் உலக பிரபல்யம் பெற்ற மார்க்க அறிஞரான டாக்டர் ஸாகிர் நாயக்கின் உரை புரஜக்டர் மூலம் விஷேட  பயான் நிகழ்ச்சிகள் காத்தான்குடி பிரதான வீதி குர்ஆன் சதுக்கத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டன.

இதனை முஸ்லிம் மக்கள் பார்வையிட்டது மாத்திரமல்லாமல் ஏனைய மாற்றுமத சகோதரர்களும் பார்வையிட்டனர். ஹச் (Hutch) நிறுவனம் ஒவ்வொரு பிரதேசத்திலும் அங்குள்ள மக்களுக்கேற்ப பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment