மீள் குடியேற்ற ஏறாவூர் மஜீத் கிராமத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அடிப்படை உதவிகளை வழங்கிவைப்பு

-பழுளுல்லாஹ் பர்ஹான்

SAM_1270ஏறாவூர்: கடந்த கால வன்செயல் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவின் மஜீத் கிராமத்திற்கு பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் ஹிறா பௌன்டேஷனின் அணுசரனையுடன் அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்ட்ட எழுபத்தைந்து  கினறுகள் இன்று சனிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

 ஹிறா பௌன்டேசனின் தலைவர் முஹம்மட் குறைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு கினறுகளை பொது மக்களிடம் கையளித்தார்.

SAM_1270

இவற்றுடன் அப்பிரதேசத்திற்கான புதிய பள்ளிவாயல் அமைக்கப்பட்டு வரும் இடத்தினையும் அங்கு மேற்கொள்ளப்படும் ஏனைய அபிவிருத்தி வேலைகளையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அப்பிரதேச மக்களின் தற்போதைய தேவைகளையும் கேட்டறிந்த பிரதிiமைச்சர் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய சகல தேவைகளையும் தனது அமைச்சின் மூலம் செய்து தருவதாக அவர்களிடம் வாக்களித்தார்.

SAM_1274

இந்நிகழ்வில் மஜீத் கிராம அபிவிருத்திக்குழுத் தலைவர் எம் எம் ரஊப், உள்ளிட்ட ஹிறா பௌன்டேஸன்  அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம் சஜி தெரிவித்தார்.

SAM_1283

Published by

Leave a comment