பெறுபேறுகளில் பின்னடைவு குறித்து ஆராயும் கூட்டம்-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

SAM_1244– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: அன்மையில் வெளியான ஜீ.சீ.ஈ. பரீட்சை முடிவுகளின் பெறுபேறுகளை ஆராயும் கூட்டமொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் இன்று காலை சம்மேளன அஷ் ஷஹீட் அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஹமட் லெப்பை, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். சுபைர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவரும்  சம்மேளன கல்வி அபிவிருத்திசபையின் தலைவருமான சட்டத்தரணி ஏ.எல். அப்துல்ஜவாத்,  காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மௌலவி அப்துல் கபூர் மதனி, காத்தான்குடிக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,சம்மேளன பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

SAM_1244
இக்கூட்டத்தில் காத்தான்குடி கோட்டத்தில் அண்மைக்காலமாக பரீட்சைகள் பெறுபேறுகளில் பின்னடைவு, மாணவ மாணவிகளிடத்தில் ஆர்வமின்மை என்பன தொடர்பில்  விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான  காரணங்களை உடனடியாக கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதியமைச்சர் உத்தரவிட்டதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம். சஜி தெரிவித்தார்.

SAM_1248

SAM_1249

SAM_1255

Published by

Leave a comment