கிண்ணியா: பிரபல மார்க்க அறிஞர் டொக்டர் சாகிர் அப்துல் கரீம் நாயக் (சாகிர் நாயக்) அண்மையில் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனின் அழைப்பையேற்று இலங்கை வந்திருந்தபோது கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டார்.
குறித்த சந்திப்பு முன்னால் பிரதியமைச்சர் ஹூசைன் பைலாவின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன், அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், ஹூசைன் பைலா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.அமீரலி, எம்.எஸ்.சுபைர், கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம்.ஹில்மி மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.




Leave a comment