‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி’ எனும் தலைப்பில் மாற்று மத சகோதரர்களுக்கான நிகழ்வு: பொலிஸார் நிறுத்தக்கோரியும் தொடர்ந்த நிகழ்வு!

– பழுளுல்லாஹ் பர்ஹான்

904212_183546681797563_1492182358_oசிலாபம்: ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி’ கடந்த  21-04-2013 ஞாயிற்றுக்கிழமையுடன் சிலாபம் க்ரவ்ன் மண்டபத்தில் இடம்பெற்றது.

பொலிசார் இறுதிக் கட்டத்தில் குழப்பம் வரும் என்று காரணம் காட்டி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர். நீதிமன்ற உத்தரவுடன் வாருங்கள் நிறுத்துகிறோம் என்று இலங்கை தௌஹீத் ஜமாஅத்தினர் கூறினர்.

 இஸ்லாம் பற்றிய மாற்று மத அன்பர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் விதமாக சிங்கள மொழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

46668_183546795130885_2037183907_n - Copy - Copy

சுமார் 3.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணி வரை நடை பெற்ற இந்நிகழ்வில்  ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் மாற்று மத அன்பர்களின் கேள்விகளுக்கு சிங்கள மொழியில் பதிலளித்தார்.

65118_183546705130894_762078414_n - Copy - Copy

‘முஸ்லிம்களுக்குள் ஷீயா, சுன்னி பிரிவினை ஏன்?’, ‘இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக இருப்பது ஏன்?’, ‘ஹலால் விஷயத்தில் முஸ்லிம்கள் பிடிப்போடிருப்பது ஏன்?’, ‘அல்லாஹ் என்ற பெயரை கடவுலுக்கு சூட்டுவது ஏன்? ‘போன்ற சிறப்பான பல கேள்விகள் மாற்றுமத அன்பர்களினால் கேட்கப்பட்டது. இதில் சிலாபம் முன்னால் நகரபிதாவும் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தனது சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

529205_183546711797560_857563869_n

904212_183546681797563_1492182358_o

Published by

Leave a comment