முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு வைபவம் காத்தான்குடியில்

வெற்றிபெற்றோர்களின் விபரங்களுடன்..

– பழுளுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????காத்தான்குடி: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய ரீதியிலான காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகளில் முதல் 10 இடங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஸமீல் (நளீமி) தலைமையில் இன்று பிற்பகல் 04.30 மணியளவில் இடம்பெற்றது.

quran winners 1

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைத் (நளீமி) யின் ஒருங்கிணைப்பின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள சகல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கும் பற்றிய  இப்போட்டியில் ஆண்களுக்கான மனனப்போட்டி மற்றும் கிராஅத் போட்டி காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியிலும், பெண்களுக்கான அல்குர்ஆன் மனனப் போட்டி மற்றும் கிராஅத் போட்டி காத்தான்குடி ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக்கல்லூரியிலும் நேற்றும் இன்றும் இடம்பெற்றன.

இதன்போது முதல் 03 இடங்களைப் பெற்றவர்களில் முதலாவது இடத்தைப் பெற்றோருக்கு ரூபா 10ஆயிரம் ரூபா மற்றும் சான்றிதழ், இரண்டாவது இடத்தைப் பெற்றவருக்கு 7500 ரூபாவும்,  மூன்றாமவருக்கு 5ஆயிரம் ரூபாவும் சான்றிதழ்களுடன் வழங்கி வைக்கப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைத்( நளீமி) தெரிவித்தார்.

பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இப்போட்டிகளில் கணிஷ்ட பிரிவு பெண்களுக்கான அல் குர்ஆன் மனனப் போட்டியில் ஏறாவூரைச் சேர்ந்த எஸ். ரஸானாவும், ஆண்களுக்கான போட்டியில் கொழும்பு கிருளப்பன்னவைச் சேர்ந்த ஏ.ஏ.அக்ரமும், 17வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கண்டி தஸ்கரையைச் சேர்ந்த எம்.எம். யூஸுப்பும், ஆண்களுக்கான கணிஷ்ட பிரிவு அல்குர்ஆன் கிராஅத் போட்டியில் காலியைச் சேர்ந்த எம்.ஏ.ஹுஸைனும், 17வயதுக்குட்பட்ட பிரிவில் வவுனியாவைச் சேர்ந்த எம்.ஆர்எம்.ரஸ்மினும், பெண்களுக்கான அல்குர்ஆன் கிராஅத் போட்டியில் கனிஷ்ட பிரிவில் கொழும்பு 15ஐச் சேர்ந்த எஃப்.எப். ஸாஹிதாவும், 17வயதுக்குட்பட்ட பெண்களில் திஹாரியைச் சேர்ந்த எஸ். சனீராவும் 1வது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைத்(நளீமி) தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைத்(நளீமி), இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஸமீல் (நளீமி), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் ஜுனைத் (நளீமி), எகிப்து மற்றும் ஈரானிலிருந்து வரவழைக்கப்பட்ட அரபுநாட்டு நடுவர்கள், காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி அலியார்(பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் அப்துல் ஜவாத் பீ.ஏ, காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் கவிமணி எம்.எச்.எம். புஹாரி(பலாஹி), எகிப்திலிருந்து வருகை தந்த அறபு நாட்டு நடுவர்கள், அரபுக்கல்லூரி முதல்வர் நடுவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இப்போட்டிக்கு நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

2 responses to “முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு வைபவம் காத்தான்குடியில்”

  1. What a shame not a single person won from your kattankududy

  2. Mashallah……..

Leave a comment