இலங்கை முஸ்லிம்களின் தற்கால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட OCMC இற்கு அரப் லீக் அழைப்பு!

-பழுளுல்லாஹ் பர்ஹான்

Arab-league.[1]கொழும்பு: அரபு லீக் அமைப்பு இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் கடந்து வாழும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முதற்கட்ட செயற்பாடாக உலகின் 51 முஸ்லிம் நாடுகளை அங்கத்துவமாக கொண்டிருக்கும் அரப் லீக் (Arab League) உடன் தொடர்பினை அண்மையில் ஏற்படுத்தி இருந்தது.

இதன் பிரதி பலிப்பாகவே இது குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதற்கு ஜெனீவாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் அரப் லீக் இன் தூதுவருமான மொஹம்மத் கமேலேச் இவ் அழைப்பினை விடுத்துள்ளதாக கடல் கடந்து வாழும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஸ்தாபகர்  முயீஸ் வஹாப்தீன்  தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு, அவர்களின் அன்றாட நடவடிக்கை தொடர்பிலான அடிப்படை உரிமையினை பாதுகாத்தல், அவர்களின் வாழ்வுரிமையினை உறுதிப்படுத்தல், இனத்துவ அடையாளத்தினை உரிமையோடு பேணுதல் போன்ற அடிப்ப்படை எண்ணக்கருக்களை கொண்டு சர்வதேச ரீதியில் ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவ் அமைப்பு எதிர்வரும் மே 2வது வாரம் அரப் லீக் பிரதிநிதிகளை சந்திக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment