இருபதாவது சரித்திர வெற்றியை நோக்கி மன்செஸ்டர் யுனைட்டட்!

_67168887_67168886[1]-MJ

லண்டன்: இங்கிலாந்து பிரிமியர் லீக் உதைப்பந்தாட்டப் போட்டியின் இவ்வருடத்துக்கான சம்பியன் பட்டத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பு  மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கு  முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட இங்கிலாந்து  பிரிமியர் லீக் உதைப்பந்தாட்ட வரலாற்றில் அதி கூடிய 20 தடவைகள் சம்பியன் பட்டத்தை வெற்றிகொள்ளும் கழகமாக மன்செஸ்டர் யுனைட்டட் திகழ்கிறது. 19 தடவைகள் வெற்றி பெற்ற கழகமாக லிவபூல்  ரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

_67168890_rvp_getty[1]

சற்று முன்னர் இடம்பெற்று முடிவடைந்த அஸ்டன் வில்லாவுடனான போட்டியில் 3 கோல்களால் மன்செஸ்டர் யுனைட்டட் வெற்றிபெற்றதுடன் சம்பியன் வாய்பு உறுதியானது. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில் வெற்றிப் புள்ளிகள் அடிப்படையில் தற்பொழுது 84 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

மீதமுள்ள 4 போட்டிகளிலும் இவ் அணி வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் அல்லது போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தாலும் அதி கூடிய வெற்றிப் புள்ளிகள் அடிப்படையில் மன்சஸ்டர் யுனைட்டட் சம்பியன் பட்டத்தை வெல்லும்.

_67168887_67168886[1]

தனது மைதானத்தில் அஸ்டன் வில்லாவை வீழ்த்தியதன் பின்னர் 76,000 இரசிகர்கள் மத்தியில் வீரர்கள் தங்களது ஆராவாரங்களையும் மகிழ்ச்சிகளையும் இரசிகர்களுக்குத் தெரிவித்தனர். இரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை முன்கூட்டி வழங்கி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

_67171945_67170831[1]

Published by

Leave a comment