காத்தான்குடி: பழைய கல்முனை ஊர் வீதியில் காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை சற்று நேரத்துக்கு முன்னர் மின்சார சபையின் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருக்கு (சைட்) வழி கொடுத்ததால்தான் தான் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக வேன் சாரதி தெரிவித்தார்.
தற்போது குறித்த வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு முடியமால் காணப்படுவதோடு மட்டுமன்றி –வீதி குறுக்கே மின் கம்பம் சாய்ந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த மின் கம்பத்தை சரி செய்வதற்கு சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என ஏதிர்பாக்கப்படுகின்றது.
குறிப்பு: இந்த வேனில் பயணித்த எவருக்கும் எவ்வித ஆபத்துக்கள் இல்லையெனவும் வேனுக்கும் ,மின் கம்பத்திற்கும்’ மாத்திரமே தேசம் எனவும் விபத்துக்குள்ளான வேன் சாரதி மேலும் தெரிவித்தார்.

Leave a comment